பேராசிரியர். திரு. டி. ஆர். சீனிவாசன், எம்.ஏ., அவர்கள் அருள்மிகு இந்தியப் பண்பாட்டுக் கல்லுரியின் ஆங்கிலதுறைத் தலைவராக பணிபுரிந்தவர். அவரிடம் கல்வி கற்ற பலர் இன்று பல சிறப்பான, உயர் பதவிகளில் உள்ளனர். 84 வயதிலும் தளராது உழைக்கும் ஆற்றல் பெற்றவர் திரு. டி. ஆர். சீனிவாசன் அவர்கள். கடமை உணர்வு மிக்கவர். நாள்தோறும் மிக கச்சிதமான உடை உடுத்தி, மிடுக்குடன் நடந்து வந்து, மிக அழகாக பாடம் நடத்தும் பாங்கே அலாதியானது. இவரது திறமையை உணர்ந்த நிர்வாகம் இவரை அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டு கல்லுரியின் முதல்வராக நியமித்தது. மிக சிறப்பான நிர்வாகத்தை செயல்படுத்திய மாமனிதர் இவர். ஆங்கில மொழிப்புலமையும், நாவன்மையும் உடையவர். கடமை, கலைந்தவராமை, நேர்மை , மாணவர்களிடம் , அன்பு, பக்தி, என பன்முகத்தன்மை உடையவராய் இவர் திகழ்ந்தார். இவரை அனைவரும் ‘டி. ஆர். எஸ் ‘ என்றே போற்றி மகிழ்வர்.
பண்பாட்டு விருது வழங்கும் விழா
பழனி இந்தியப்பண்பாட்டுக் கல்லுரியின் முன்னாள் மாணவர்களின் கூடல் நிகழ்ச்சியானது, பழனி அருள்மிகு பழனியாண்டவர்பாலிடெக்னிக் கல்லுரியில் 12.7.2019 ஆம் நாள் வெள்ளிக்கிழமை 9.30 மணியளவில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக பேராசிரியர் மேனாள் முதல்வர் திரு. டி. ஆர். சீனிவாசன், எம்.ஏ., அவர்கள் கலந்துகொண்டார்.
இந்திய பண்பாட்டு அமைப்பின் ( indian-culture.org ) சார்பில் பேராசிரியர் மேனாள் முதல்வர் அவர்களுக்கு “ இந்த நூற்றாண்டின் ஒப்பற்ற மேதை” ( Outstanding Man of Intellect of this Century) பண்பாட்டு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது விருதினை இந்திய பண்பாட்டு அமைப்பின் மதிப்புறு தலைவர் முதுமுனைவர் இரா. கண்ணன், ப்பிஎச்.டி., டி.லிட்., அவர்கள் வழங்கி கௌரவித்தார்கள்.
நிகழ்ச்சிக்கு திரு. நடராஜன், தலைமை வகித்தார். திரு. ரெங்கநாதன் நாயுடு, எம். ஏ., பி.எல்., தலைவர் திரு. ராஜன், செயலர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.