Keynote by Poet V. Jeyaraman

கவிதை

கவிஞர் ஜெயராமன்

பண்பாட்டைக்   காப்பதற்கு

இன்னொரு   அமைப்பு

குடந்தைப் பகுதியில்

புதியதொரு அவதாரம்

 

மண்ணின் மைந்தர்களை

மாண்புடன் மறைந்தவர்களை

நம்மண்ணில் உதித்தவர்களை

நாநிலமும் போற்றுபவர்களை

 

கருத்துக்களில் உலாவர

களம்  அமைத்து தந்தவரே

குருமூர்த்தி நகர்வாழ்

கருத்தரங்கு முன்னவரே

 

தலைமைப் பொறுப்பு

தண்டனை என்றாலும்

எந்தனை அழைத்து

பந்தம் காப்பவரே

 

இழையோடும் அன்பால்

இதயத்தைக் கவர்ந்தவரே

முனைவர் கண்ணனாரே

முதன்மை வணக்கம்

 

ஊருக்கு     சேவைசெய்ய

உடனிருக்கும்     N. S. S

உடன்பிறவா சகோதரர்

உங்களுக்கும் வணக்கம்

 

ஆலயத்தின் மேலாளர்

துணைமேலாளர் வணக்கம்

சங்கத்தின் பொருளாளரே

நெஞ்சத்தின் வணக்கம்

 

பள்ளிப் பருவத்தில்

பற்றிய நண்பரே

பண்பாளர் முத்தலீப்

அன்பான வணக்கம்

 

வரவேற்றுப் பேசிய

பொறியாளர் செயசிறியே!

நன்றியுரை ஆற்றவுள்ள

செல்வமே! வணக்கம்

 

கணினிமைய்ய ஊழியர்களே

கனிவான வணக்கம்

மாணவச் செல்வங்களே

மனம்கனிந்த வணக்கம்

 

முன்னாள் தலைவர்

முருகனார் அவர்களுக்கும்

அரங்கத்தில் கூடியிருக்கும்

அனைவருக்கும் வணக்கம்

 

குடந்தைப் பகுதியில்

பூத்த மலர்கள்  பன்மலர்கள்

பறித்துச் சூடியதோ

நன்மலர்கள்   எண்மலர்கள்

 

தமிழாய் ஆங்கிலமாய்

தரணியில் வாழ்ந்தவர்களை

சொல்மாலைத் தொடுத்து

சொக்கவைக்க வந்தவர்களே!

 

வாசிப்பின் அவகாசத்தை

சுவாசமாய்க் கொண்டவர்களே

கற்கண்டு கருத்துக்களை

நறுக்கென்று தைப்பவர்களே!

 

கண்ணனார் கண்டெடுத்த

கருத்து முத்துக்களே

நண்பர்களே சகோதரிகளே

நயமான வணக்கங்கள்

 

முன்னோடியாய் இருந்தவர்கள்

முகவரியைத் தந்தவர்கள்

பயணத்தைச் செய்தவர்கள்

பாதையை அமைத்தவர்கள்

 

பச்சை மட்டைகள்

பழுத்து விழுந்தாலும்

தடத்தைப் பதிக்குமே!

ஏறும்படி ஆகுமே!

 

குளத்தில் தாமரைப்பூ

தேனைச் சுமந்தாலும்

தவளையும் அறியுமோ

தண்ணீரில் வாழ்ந்தாலும்

 

தரணியே புகழ்ந்தாலும்

தாய்மண் அணைக்கணும்

மண்ணில் புதைந்தாலும்

விதையாய் முளைக்கணும்

 

கருத்து வித்துக்கள்

காலத்தால் அழியுமோ

கருத்தை விருந்தாக்க

கனிவுடன் அழைக்கிறேன்

 

பள்ளிச் சிறார்கட்கு

பாதையைக் காட்டுங்கள்

தாலாட்டும் பேச்சில்

தாயாக மாறுங்கள்

 

தலைப்புக்கு வெளியே

செல்லாமல் பேசுங்கள்

அல்லவைத் தவிர்த்து

நல்லவை பேசுங்கள்

 

கால அளவிற்குள்

கருத்தைப்  பதியுங்கள்

அழைப்பொலி அழைக்குமுன்

அருமையாய் முடியுங்கள்..!

வணக்கம்.