Lead Note
பாராட்டு மடல்
குருமூர்த்தி நகருக்கு பெருமை சேர்க்கின்ற வகையில் குருமூர்த்தி நகரில் “இந்திய பண்பாட்டு அமைப்பு” என்னும் அமைப்பை ஏற்படுத்தி “குடந்தைப் பகுதிச் சான்றோர்கள்“ என்னும் கருத்தரங்கத்தையும் ஏற்பாடு செய்து, அதில் என்னையும் முன்னிலைப் படுத்தியமைக்கு முதற்கண் என் நன்றியினை சமர்ப்பிக்கின்றேன்.
கருத்தரங்கத்தில் உரையாற்றிய சான்றோர்களின் கருத்துக்கள் நாட்டு மக்கள் அறியும் வண்ணமும் குறிப்பாக இளைய தலைமுறையினருக்கு நல்ல பாடமாகவும் அமைந்திருந்தது.
நாடென்ன செய்தது நமக்கு என எண்ணாமல் நாம் என்ன செய்தோம் நாட்டிற்கு என்ற கருத்திற்கிணங்க என்னால் முடிந்த சில சமுதாயப் பணிகளை குருமூர்த்தி நகரில் நல சங்கத்துடன் இணைந்து செய்து வருகிறேன். எனது சமுதாய பணிகளை பாராட்டி பண்பாட்டு விருது வழங்கியது வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்வாகிவிட்டது. இதற்கு எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் – அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை.
என்ற வள்ளுவரின் வாக்கினை ஒட்டி இதுகாறும் அன்னதானம் செய்து வந்த தாங்கள் தற்போது குருமூர்த்தி நகரில் செவிக்கும் உணவு அளித்து சிறப்பு சேர்த்துள்ளீர்கள்.
தனி ஒருவராய் இருந்து சமுதாயம் மற்றும் ஆன்மீகப் பணிகளில் தங்களை ஆட்படுத்தி சேவை செய்து வரும் முனைவர் திரு.R.கண்ணன் அவர்கள் குருமூர்த்தி நகரில் பண்பாட்டு மையம் அமைத்து ஒரு முத்தான கருத்தரங்கத்தையும் நடத்தியது மிகவும் பாராட்டுக்குரியது.
நன்றியுடன்…
நா.சு.சுப்பிரமணியன்.