இலவச பொது ஆரோக்கியம் மற்றும் சர்க்கரை நோய் விழிப்புணர்வு முகாம்

திருவிடைமருதூர், பிப்.17: திருபுவனத்தில் இலவச பொது சுகாதாரம் மற்றும் சர்க்கரை நோய் விழிப்புணர்வு முகாம் நடந்தது.தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் தாலுக்கா, திருபுவனம் ஆதிசக்தி சித்தர் ஞானபீடத்தில், இந்திய பண்பாட்டு அமைப்பு அறக்கட்டளையின் ஆதிசக்தி சித்தர் ஞானபீடம், கும்பகோணம் காருண்யா சுகாலயா மருத்துவமனை, திருபுவனம் மகளிர் அமைப்பு ஆகியன இணைந்து நடத்திய இலவச பொது ஆரோக்கியம், மருத்துவம் மற்றும் சர்க்கரை நோய் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

மகளிர் அமைப்பு தலைவி சங்கீதா வரவேற்றார். பொறியாளர் ஹரிபிரகாஷ் தலைமையேற்று முகாமை தொடங்கி வைத்தார்.இந்த முகாமில் மருத்துவர்கள் சிவக்குமார், லட்சுமி, சுரேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு நோயாளிகளுக்கு மருத்துவ பரிசோதனைகளை செய்தனர். இந்த முகாமில் ஆசீவக தமிழ் சித்தர் அருள்திரு கண்ணன் அடிகளார், இந்தியன் மழலையர் தொடக்கப்பள்ளி புவனேஸ்வரி, திருவிடைமருதூர் ரெட் கிராஸ் பாஸ்கரன், சுப்பிரமணியன், ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார். முகாமில் 200 பேர் கலந்து கொண்டனர்.

ஆதிசக்தி அம்மன் ஞானபீடம்: பெண்கள் நடத்திய கும்பாபிஷேகம்

DhinaThanthi 6th Sep 2024
Dhinakaran 6th Sep 2024

இன்று நடைபெற்ற மாபெரும் குடமுழுக்கு விழா!!!! அனைத்துமே சிறப்பான நிகழ்வுகள்!!! நடத்தியது அம்மா அல்லவா!!! அருள்திரு அம்மா, திருமதி லட்சுமி அம்மா, அம்மாவின் திருகுடும்பத்தார் அனைவருக்கும் எங்களின் அன்பான நன்றியினை தெரிவித்து கொள்கிறோம். மாத காலமாக இந்த அற்புத வரலாறு படைக்க போகும் இந்த ஆதிசக்தி மற்றும் சித்தர் பீடத்தை உருவாக்க அம்மாவோடு இருந்து பயணித்த அணைத்து அம்மாவின் அணுக்க தொண்டர்கள் பாதம் தொட்டு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். அம்மா உங்கள் பாதமலரடிக்கு எங்கள் சரணங்கள் !!!!!!

இயற்கை வழிபாடு – 28 July 2024

கலைஞர் செய்திகள் – இயற்கை வழிபாட்டு நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது

ராஜ் நியூஸ் தமிழ் – இயற்கை வழிபாட்டு நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது